Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 டிசம்பர் (ஹி.ச.)
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக நேற்று (டிசம்பர் 30) காலமானார். இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
டாக்காவில் இன்று (டிசம்பர் 31) கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அவர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானை சந்தித்த மத்திய ஜெய்சங்கர் இரங்கல் கடிதத்தை வழங்கினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
டாக்காவிற்கு வந்தடைந்ததும், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானை சந்தித்தேன். பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை அவரிடம் வழங்கினேன்.
இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தேன்.
கலிதா ஜியாவின் தொலைநோக்குப் பார்வை நமது கூட்டாண்மையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b