Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 டிசம்பர் (ஹி.ச.)
ரெயில் ஒன் செயலி வழியாக முன்பதிவு டிக்கெட் புக்கிங் செய்யும் போது, ரயில்வே வேலட்டில் இருந்து பேமெண்ட் செலுத்தினால் 3 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ஆனால், பிற டிஜிட்டல் தளம் வாயிலாக பேமெண்ட் செய்தால் தள்ளுபடி கிடையாது.
இந்த நிலையில், பயணிகள் ரெயில் ஒன் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக எந்த வகையான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் இருந்து கட்டணம் செலுத்தினாலும் இனி முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி தரப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14.01.2025 முதல் 14.07.2026 வரை இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரயில் ஒன் செயலியில் வாலட்டில் இருந்து டிக்கெட் கட்டணம் செலுத்தினால் அளிக்கப்படும் 3 சதவீத தள்ளுபடியும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் ஒன் செயலியை தவிர வேறு எந்த தளத்தில் டிக்கெட் செய்தாலும் இந்த ஆஃபர் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM