சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று 6-வது நாளாக போராட்டம்
சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.) சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 5-வது நாளாக எழும்பூரில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் ம
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் இன்று 6-வது நாளாக போராட்டம்


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று 5-வது நாளாக எழும்பூரில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து 15 மண்டபங்களில் தங்க வைத்தனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் அனுமதியின்றி கூடுதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் 6-வது நாளாக இன்று (டிசம்பர் 31) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b