Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 31 டிசம்பர் (ஹி.ச.)
வைகுண்ட துவாதசியையொட்டி திருப்பதி திருமலையில் உள்ள புஷ்கரிணி தீர்த்தத்தில் சக்கர ஸ்நானம் வைபவ நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
வைகுண்ட துவாதசி பர்வ தினத்தையொட்டி இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரிணி தீர்த்தத்தில் முக்கோடி சக்கரஸ்நானம் வைபவமாக நடைபெற்றது.
முதலில் கோயிலில் நிகழ்த்திய பூஜைகள், கைங்கர்யங்களை நிறைவு செய்த பிறகு ஸ்ரீ சக்ரத்தாழ்வாரை பல்லக்கில் வெளியே அழைத்து வந்தனர்.
ஸ்ரீ வராஹஸ்வாமி புஷ்கரிணியில் ஸ்ரீ சுதர்சன சக்ரத்தாழ்வாருக்கு விசேஷ ஸ்நபன திருமஞ்சனம் நடத்தினர். பால், தயிர், சந்தனம், பல்வேறு சுகந்த திரவியங்களால் ஸ்நபன திருமஞ்சன நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
பின்னர் துளசி மாலையை அணிவித்து ஸ்ரீ சுதர்சன சக்ரத்தாழ்வாருக்கு சாஸ்திரோக்தப்படி புஷ்கரிணியில் சக்கரஸ்நானம்
நடத்தினர்.
புஷ்கரிணி தீர்த்தத்தில் சக்கரஸ்நான சமயத்தில் யார் ச்நானம் செய்கிறார்களோ அவர்களுக்கு திருமலை சேஷாசல மலைகளில் உள்ள 66 கோடி புண்ய தீர்த்தங்களின் ச்நான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆண்டுக்கு நான்கு முறை சக்கரஸ்நான நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். ஏழுமலையானின் பிரம்மோத்சவங்களின் கடைசி நாள், வைகுண்ட த்வாதசி, ரதசப்தமி, ஆனந்த பத்மநாப விரத பர்வ தினங்களில் மட்டுமே சக்கரஸ்நானத்தை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் திருமலையில் பக்தர்களின் கூட்டம் வழக்கம்போல் தொடர்கிறது.
வைகுண்ட ஏகாதசியான நேற்று 67,053 பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்திற்குப் பிறகு உண்டியல் காணிக்கையாக ரூ. 2.25 கோடி செலுத்தினர். மேலும் 16,301 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக
செலுத்தினர்.
கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது.
இதையடுத்து புஷ்கரணியில் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam