திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிய தொடங்கிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர், 31 டிசம்பர் (ஹி.ச.) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுவிந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் பள்ள
திருச்செந்தூர்


திருச்செந்தூர், 31 டிசம்பர் (ஹி.ச.)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குழுவிந்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு தொடர்ந்து எட்டு நாட்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வேல் குத்தியும் காவடி எடுத்தும் வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.

அதிகாலை முதல் கோவில் கடல் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam