நாளை முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம்
சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.) சென்னை சென்டிரல், கும்மிடிப்பூண்டி, கடற்கரைக்கு செல்லும் ரெயில்களின் நேரத்தை மாற்றியமைத்து புதிய பட்டியலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. நாளை (ஜனவரி 1) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ள
நாளை முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம்


சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை சென்டிரல், கும்மிடிப்பூண்டி, கடற்கரைக்கு செல்லும் ரெயில்களின் நேரத்தை மாற்றியமைத்து புதிய பட்டியலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. நாளை (ஜனவரி 1) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு,

திருத்தணியில் இருந்து புறப்பட்டு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில், அரக்கோணத்திற்கு காலை 5.50 மணிக்கு பதிலாக காலை 5.55 மணிக்கு சென்றடையும்.

திருத்தணியில் இருந்து புறப்பட்டு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில், அரக்கோணத்திற்கு மதியம் 2.40 மணிக்கு பதிலாக மதியம் 2.55 மணிக்கு சென்றடையும்.

அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக காலை 9.55 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும்.

சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் செல்லும்.

செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும்.

என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b