Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 31 டிசம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டத்தில் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 01.01.2026 முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி, தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் நுழைய முழுமையாகத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த நேரத்தில் திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி- பஞ்சப்பூர் வழியாக செல்ல வேண்டும்.
மேலும், பஞ்சப்பூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து இடைநில்லா பேருந்துகளும்
(பாயிண்ட் டூ பாயிண்ட்) தஞ்சாவூர் பைபாஸ் சாலையை பயன்படுத்த வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றங்கள் முறையாக நடை முறைப்படுத்தப்படுகிறதா?
என்பதை கண்காணிக்கும் வகையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (திருவெறும்பூர்), காவல் துணை ஆணையர் (தெற்கு), வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு காலமுறைப்படி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b