Enter your Email Address to subscribe to our newsletters

பிஜப்பூர், 4 டிசம்பர் (ஹி.ச)
2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ள மத்திய அரசு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள கங்கலுார் வனப்பகுதி 555யில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர், பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா பிரிவினருடன் இணைந்து அப்பகுதிகளில் இன்று (டிச 04) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு அவர்களும் சுட்டனர்.
இந்நிலையில் இன்று 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே, நேற்று நடந்த சண்டையில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்த சம்பவத்தையும் சேர்த்து சத்தீஸ்கரில் இந்தாண்டில் மட்டும், 281 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில், 246 நக்சல்கள் பஸ்தார் பகுதியை சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b