ஆஸ்திரேலியாவில் வேலை எனக் கூறி கோவை வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி - ஒருவர் கைது
கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.) கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸிடம் ஆஸ
A man in Coimbatore was cheated of ₹3.5 lakh by a person who promised him a job in Australia – one person has been arrested.


கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.)

கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ்.

இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸிடம் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக வேலை காலியாக இருப்பதாகவும் அதற்கு வேலையை பெற்று தருவதாகவும் கூறி உள்ளார்.

அப்போது அதற்கு விசா உள்ளிட்ட பணி 3.5 லட்சம் பணம் வேண்டும் என்று கூறி உள்ளார்.

அதை ஜேம்ஸ் கொடுத்து உள்ளார். ஆனால் அருண் வேலை வாங்கி கொடுக்கவில்லை பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அவரது தந்தை டேனியல் ஆபிரகாம் புகார் கொடுத்தார். அதன் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அருணை கைது செய்தனர்.

இவர் மீது சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் மேலும் வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

Hindusthan Samachar / V.srini Vasan