சென்னை பெருநகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் அறிமுகம்
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு, கூ
Pol


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் 43 காவல் பணியிடங்களில் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் ஆணையாளர் அதன் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும், ஆண் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணிச்சுமை, அத்தியாவசிய தேவைகள் மற்றும் நலன்கள் மீது தனிக்கவனம் செலுத்தி, காவலர் குறை தீர்க்கும் நாள், காவல்துறை பல்பொருள் அங்காடி நவீனமாக்கல், வாராந்திர ஓய்வு, இலவச மருத்துவ முகாம்கள் என பல்வேறு நலன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், 59 வயதுடைய காவல் ஆளிநர்களுக்கு இரவு பணி விலக்கல், 25 வருடங்கள் பணிமுடித்த பெண் காவல் ஆளிநர்களுக்கு இரவு பணி விலக்கலுடன், சுழற்சி முறையில் ஓய்வு, ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு ஆயுதப்படை வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ‘‘பூவையர் புத்துணர்ச்சி சிற்றில்‘‘ என்ற பெயரில் தங்கும் விடுதி, பணி நிமித்தம் சென்னைக்கு வருகை தரும் மற்ற மாவட்ட பெண் காவலர்களுக்கு பெண் காவலர் தங்கும் விடுதி, என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், காவல் குடும்பத்தினருக்காக காவலர் குடியிருப்புகளில் அத்தியாவசிய தேவைகள் மேம்படுத்துதல், காவல் குடும்ப பெண்களுக்கு தையல் மற்றும் கணினி பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்குதல், பட்டப்படிப்பு முடித்த காவல் குடும்ப வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் குடும்ப சூழலையும், காவல்துறை பணியையும் சமமாக பாவித்து, பாதுகாப்பு, கண்காணிப்பு, நீதிமன்ற பணிகள் என காவல்துறையின் அனைத்து பணிகளிலும் கடின உழைப்புடன் குறைகளின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்கள் தடைகளின்றி கிடைப்பதை உறுதி செய்யும்

பொருட்டும், அவர்கள் பணியாற்றும் இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் அமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், சென்னை பெருநகரில், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் (AWPS), ஆயுதப்படை I மற்றும் II வளாகங்கள், மோட்டார் வாகனப்பிரிவு, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு அலுவலகம் உள்பட 43 காவல் பணி இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப., அவர்கள் இன்று (04.12.2025), சென்னை பெருநகரில் பொருத்தப்பட்டுள்ள சானிட்டரி நாப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தின் இயக்கத்தை புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் பெண் காவல் துறையினர் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

காவல் ஆணையாளர் அவர்களின் இத்திட்டத்தின் மூலம், சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, மோட்டார் வாகனப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணியாற்றி வரும் சுமார் 5,900 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் முனைவர் திருமதி.வனிதா (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு) திரு.M.இராதாகிருஷ்ணன், (ஆயுதப்படை), திருS.அன்வர்பாஷா, (ஆயுதப்படை-2) காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ