Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.)
கோயம்புத்தூர் மருதமலை பகுதியில் பாரதியார் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 39 துறைகளில் முனைவர் பட்டம் உள்பட 54 முதுகலை படிப்புகள் உள்ளன.
இந்த பல்கலைக் கழகத்தின் கீழ் 143 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பாரதியார் பல்கலைக் கழகம் தேசிய மதிப்பீடு A++ கிரேடு அங்கீகாரம் பெற்று உள்ளது.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பிரிவுகளில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 1200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என்று 1500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பாரதியார் பல்கலை பதிவாளராக, பெரியார் பல்கலையின் இயற்பியல் துறையை சேர்ந்த ராஜவேல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் (பொறுப்பு) பதிவாளர் பொறுப்பில் இருந்த பொழுது ரூபா குணசீலன் விதிமுறைகளை மீறி செயல்பட்டது, பல்கலைக் கழக நிதி குழு மற்றும் சிண்டிகேட் ஒப்புதல் இன்றி பணிகளை மேற்கொண்டது. உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதனை அடுத்து ரூபா குணசீலன் மீதான புகார்களை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம் ரவி உத்தரவிட்டு இருந்தார்.
என்னைத் தொடர்ந்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் பொறுப்பு பதிவாளர்,பேராசிரியர் ரூபா குணசீலனை பணியிடை நீக்கம் செய்து பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்தல் குழு உறுப்பினர் மற்றும் பல்கலை பதிவாளர் ராஜவேல் தற்பொழுது பணியிட நீட்டம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan