Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.)
கோவை, ஒண்டிப்புதூரைச் சேர்ந்த பால் மேத்யூ, இவருடைய மனைவி ஷெரின் ஷீபா, இருவரும் சிங்காநல்லூர் கோத்தாரி மில் சந்துப் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சோழா புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். கணபதி கார்டன், குபேரபுரி என்ற பெயர்களில் மாதாந்திர தவணையில் வீட்டுமனை தருவதாக பணம் வசூலித்தனர்.
முன்பணமாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், மாதத் தவணை முறையில் ரூபாய் ஐந்தாயிரம் செலுத்த வேண்டும் என்றும், ரூபாய் 25,000 செலுத்திய உடன் ஒப்பந்த பத்திரம் தரப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் தவணைத் தொகை செலுத்திய பின் அவர்களுக்கு வீட்டுமனை கிரையம் செய்து தரப்படும் என்றும் கூறினர்.
இதனை நம்பி இந்த நிறுவனத்தில் வீட்டுமனைகள் வாங்க ஆர்வமுடன் பலரும் பணம் செலுத்தினார்கள். மொத்தம் 103 பேரிடம் ரூபாய் ஒரு கோடியே 35 லட்சத்து 96 ஆயிரம் பணம் வசூலித்து விட்டு வீட்டுமனைகள் கிரயம் செய்து கொடுக்கவில்லை.
இந்த மோசடி குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கணவன் - மனைவி மீது கூட்டிச் சதி, மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடத்திய நீதிபதி செந்தில்குமார் குற்றம் சாட்டப்பட்ட பால் மேத்யூ, ஷெரின ஷீபா, ஆகியோருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், ரூபாய் ஒரு கோடி 39 லட்சத்து 22,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகை பணத்தை இழந்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செதின் ஷீபா நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார் நேற்று தீர்ப்பு கூறும் போது அவர் ஆஜராகவில்லை இதைத்தொடர்ந்து செரினா ஷீபாவுக்கு பிடிவாரென்று பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / V.srini Vasan