Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.)
தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள தென்கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் சுயம்பு வடிவில் வெள்ளியங்கிரி ஆண்டவர் விற்று இருக்கும் ஏழாவது மலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதை அடுத்து ஒன்றரை அடி உயரம் உள்ள செம்பு தீப கொப்பரைக்கு பேரூர் ஆதினம் மடத்தில் வைத்து பேரூர் ஆதீனம் சிறப்பு பூஜை செய்து அணையா தீபத்தை நேற்று முன் தினம் ஏற்றினார்.
இதைத்தொடர்ந்து அணையா தீப இயக்க அறக்கட்டளையினர் மற்றும் சிவனடியார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை ஆக பேரூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கு இருந்து மகா தீபம் கொண்டு செல்லப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழா திருநாளான நேற்று அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் உடனவர் மனோன்மணி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் திருக்கோவில் சன்னிதானத்தில் இருந்து சிறு விளக்கு ஏற்றி கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் தீபம் ஏற்றப்பட்டு, கொப்பரை தீபத்தை ஏற்றி ஏழாவது மலை உச்சிக்கு காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏழாவது மலை உச்சிக்கு சென்றவர்கள் ஏழாவது மலையின் உச்சியில் கொப்பறையில் மகா தீபம் ஏற்றி சிவ சிவ என முழக்கங்களுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan