கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களுக்கு டிசம்பர் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது
கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.) கோவை விமான நிலையம் அருகே நவம்பர் 2ம் தேதி தனியார் கல்லூரி மாணவி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூன்று பேர் காவல்துறையினரால
In Coimbatore, the court custody of the accused in the college student sexual assault case has been extended until December 17.

கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.)

கோவை விமான நிலையம் அருகே நவம்பர் 2ம் தேதி தனியார் கல்லூரி மாணவி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய மூன்று பேர் காவல்துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

மூன்று பேரும் அன்றைய தினம் கோவில்பாளையத்தில் தேவராஜ் என்பவரை தாக்கி விட்டு வந்து பாலியல் வன்கொடுமையை செய்துள்ளனர்.

மேலும் இவர்களால் தாக்கப்பட்ட தேவராஜ் உயிரிழந்தார் அது குறித்து கோவில்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கும் டிசம்பர் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan