Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 4 டிசம்பர் (ஹி.ச.)
கோவையின் பல புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் லேசான மிதமான மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை விட்டு விட்டு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முதலான ஈரப்பதத்துடன் கூடிய காற்றோட்டம், காலை நேர மேகக் கடத்தல் உள்ளிட்ட காரணங்களால் மழை உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் தூறலாகவும் மழை பதிவாகி வருகிறது.
காலை நேரப் போக்குவரத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாத போதிலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மழையால் சிரமம் அடைந்தனர்.
புறநகர் விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட மழை, தோட்டப் பயிர்களுக்கு சாதகமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan