சென்னையில் இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு - பயணிகளுக்கு டிக்கெட் பணத்தை திருப்பித் தர ஏற்பாடு
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.) கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனத்தில் பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக இண்டிகோ விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அரசு டேட்டாவின்படி டிசம்பர் 1ம் தேதி 49.5 சதவீ
சென்னையில் இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு - பயணிகளுக்கு டிக்கெட் பணத்தை  திருப்பித் தர ஏற்பாடு


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)

கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான நிறுவனத்தில் பைலட்டுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக இண்டிகோ விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

அரசு டேட்டாவின்படி டிசம்பர் 1ம் தேதி 49.5 சதவீத விமானங்கள் தான் சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றனர். இது நேற்று மோசமானது. நேற்றைய தினம் 35 சதவீதம் விமானங்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு புறப்பட்டு சென்றன.

மும்பை விமான நிலையம், பெங்களூர் விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

மேலும் பல விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (டிச 4) 28 புறப்பாடு, 6 வருகை என 34 சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

டிக்கெட் பணத்தை திருப்பித் தருவதாக இண்டிகோ தெரிவித்துள்ளதால், அதனைப் பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b