Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 4 டிசம்பர் (ஹி.ச.)
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் SIR பணிகளை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தால் பல லட்சம் வாக்குகள் பறிபோகும் அபாயம் இருப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துணை போகாதே துணை போகாதே பாஜக அரசிற்கு தேர்தல் ஆணையம் துணை போகாதே
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வாக்கு சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் கிறித்துவ மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கிடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / Durai.J