பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் டிச. 8ல் கும்பாபிஷேகம் - முன்னேற்பாடுகள் தீவிரம்
திண்டுக்கல், 4 டிசம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தில் முருக பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலுக்கு வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்த பின்னரே மலை ஏறுக
திருஆவினன்குடி முருகன்  கோயிலில் டிச. 8ல் கும்பாபிஷேகம் - முன்னேற்பாடுகள் தீவிரம்


திண்டுக்கல், 4 டிசம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தில் முருக பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலுக்கு வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமியை தரிசனம் செய்த பின்னரே மலை ஏறுகின்றனர்.

திருஆவினன்குடி முருகன் கோயிலில் டிச. 8ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம் முகூர்த்த கால் நவ.5 ல் நடைபெற்ற நிலையில் யாகசாலை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைதொடர்ந்து மூலவர் சன்னதி விமான கலசம், ராஜகோபுர விமான கலசங்கள் உட்பட பிரகார விமான கலசங்கள் என 19 கலசங்கள் டிச.1 அன்று பொருத்தப்பட்டன.

யாகசாலையில் வைக்கக்கூடிய குடங்களுக்கு நுால் சுற்றி அழகு செய்யும் பணிகளில் அர்ச்சகர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அன்னதானம் கூடமும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / vidya.b