Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 4 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 6 புதிய மகளிர் விடியல் பேருந்துகள் துவக்க விழா இன்று
(டிச 04) காலை நடைபெற்றது.
விழாவிற்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஏ.ஆர். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் கோட்டமேலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். புதிய பேருந்துகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிளை மேலாளர்கள் ஜேக்கப். ரமேஷ் பாபு . போக்குவரத்து கழகதொழிற்சங்க பொதுச் செயலாளர் தர்மன் பொருளாளர் முருகன் நிர்வாகிகள் கருப்பசாமி மகாவிஷ்ணு லிங்கசாமி மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
புதிய பேருந்துகள் & வழித்தட விபரம் பின்வருமாறு:
TN72N 2675 தூத்துக்குடி - சுப்பிரமணியபுரம் (வழி கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கட்டாலம்பட்டி, சேர்வைக்காரன்மடம், சாயர்புரம்)
TN72N 2684 தூத்துக்குடி - கீழவைப்பார் (வழி அமெரிக்கன் மருத்துவமனை, தாமஸ்புரம், தருவைகுளம், பட்டிணமருதூர், வேப்பலோடை, கடலூர்)
TN72N 2656 தூத்துக்குடி - பெருங்குளம் (வழி கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கட்டாலம்பட்டி, செய்துதையார்புரம், சாயர்புரம், நட்டாத்தி
TN72N 2670 கோவில்பட்டி - வெள்ளாளங்கோரி (வழி நாலாம்பட்டிபுதூர், வாமாரமடகி, கட்டாரம்குளம், செட்டிகுறிச்சி, கோனேர்கோட்டை)
TN72N 2692 கோவில்பட்டி - கீழரால் (வழி திட்டக்குளம், கொடுக்கும்பாறை, கசவன்குன்று, செம்மடூர், டி.சண்முகாபுரம், வலம்பட்டி)
TN72N 2688 கோவில்பட்டி - வேடபட்டி (வழி விங்கம்பட்டி, கடலையூர், மலைப்பட்டி, தாப்பாத்தி, வடமலாபுரம், அசேர்குளம்)
TN72N 2716 கோவில்பட்டி - அகிலாண்டபுரம் (வழி தானாகண்டபுரம், இளமச்சாவல், வில்லக்குசேரி, சிவஞானபுரம், சவலாப்பேரி, கரிசல்குளம்)
இவ்வாறு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b