பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது, பழைய நடைமுறைப்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச) சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய வேளாண்மை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நபார்டு வங்கியின் கூட்டுறவு மாநாடு 2025 நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்த
Periya karuppan


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச)

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய வேளாண்மை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நபார்டு வங்கியின் கூட்டுறவு மாநாடு 2025 நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டார்.

மேலும் தமிழ்நாடு நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்தன் ,கூட்டுறவுத் துறை செயலாளர் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பெரியகருப்பன் விழா மேடையில் பேசியது,

சர்வதேச கூட்டுறவு ஆண்டாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும்

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறைக்கு நபார்டு வங்கியின் வழிகாட்டுதல் அவசியமானது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான் இந்த அரசை முதலமைச்சர் வழிநடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கூட்டுறவு மாநாடு மற்றும் கண்டாச்சி விரைவில் நடைபெற உள்ளது, ஒரு வாரம் நடைபெறும் அந்த மாநாட்டில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது, வெளிமாநிலத்தவர்கள் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடைபெற உள்ளது

இந்தியாவில் மிகப் பழமையான கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரூரில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் பல புதுமைகளைப் படைத்து சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் பாராட்டினார், மற்ற மாநிலங்களும் தமிழ்நாட்டின் கூட்டுறவு சங்கங்களை பின்பற்ற வேண்டும் என அவர் அப்போது கூறினார்.

கூட்டுறவு இயக்கம் தமிழ்நாட்டில் எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறது, இந்த ஆண்டு பயிர் கடன் இலக்காக ரூ 20 ஆயிரம் கோடி முதலமைச்சர் நிர்ணயித்துள்ளதாகவும்

இந்தியாவில் விவசாயிகளுக்கு அதிகம் உதவி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றார்.

கலைஞர் கடந்த 2006 ஆண்டு 7000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார், நம்முடைய முதலமைச்சர் ஆட்சி அமைந்த உடன் 12 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார், தொழில் துறைக்கு இணையாக வேலை வாய்ப்பு தருவது விவசாயத்துறை என்றும் கூட்டுறவுத்துறையில் கணினி மயமாக்குவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறை செயலாளர் சத்யபிரத சாகு விழா மேடையில் பேசியபோது,

கூட்டுறவுத் அனைவருக்கும் முக்கியமானது, தமிழ்நாடு கூட்டுறவுத் மிக சிறப்பாக உள்ளது, இதனால் விவசாய மக்கள் பெரிய அளவில் பயன் அடைந்து வருகிறார்கள் என்றார்.

தமிழ்நாடு நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆனந்தன் பேசியது,

ஒரு நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவு அமைப்பு இன்றியமையாதது, மும்பையில் ஒரு லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் சிறந்த கூட்டுறவு என்றால் ஆவின், தமிழ்நாடு சர்க்கரை ஆலை மிகச் சிறப்பாக செயல்படுகிறது என கூறிய அவர்

இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்

நபார்டு தொடங்கிய நாள் முதல் கூட்டுறவு வளர்ச்சிக்கு பெரிய அளவில் பங்காற்றி வருவதாகவும்

நபர்டு வங்கி கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மற்ற வங்கிகளுக்கு நிகராக தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர், கூட்டுறவு நாட்டு வளர்ச்சியில் தவிர்க்க முடியாதது என்றார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் பேசியது,

தமிழ்நாடு தான் கூட்டுறவு அமைப்புகளின் தொன்மை, நாட்டிலேயே தமிழ்நாடு கூட்டுறவு அமைப்புகள் தான் சிறப்பாக பணியாற்றி வருகிறது, அதற்கு சான்றாக ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் நாம் முதலிடத்தில் உள்ளோம், தமிழ்நாடு தான் நாட்டிற்கு முன்னோடி மாநிலமாக கூட்டுறவில் உள்ளது என்றார்....

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன்,

தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு மாநாடு மற்றும் கணக்காட்சி நடைபெற உள்ளது, ஒரு வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்பார்கள் என கூறிய அவர்

அதிமுக ஆட்சியில் முறையாக கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை,

அதனை சரி செய்யக்கூடிய பணிகள் 70% நிறைவடைந்துள்ளது, பணிகள் நிறைவடைந்த உடன் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என்றும் கடந்த அதிமுக ஆட்சி தவறுகள் சரி செய்யப்பட்டு விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என்றார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என கூறிய அமைச்சர் பழைய நடைமுறைப்படி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் எனவும்

பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானை சேர்ப்பது நல்ல யோசனை,இது குறித்து ஆலோசிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ