தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.) பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்


சென்னை, 4 டிசம்பர் (ஹி.ச.)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

ஏவிஎம் வாயிலாக அவர் தயாரித்த பல்வேறு வெற்றித் திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் வனிகத்தையும் மதிப்பையும் உலகளவில் உயர்த்தியவை என்றால் அது மிகையாகாது. தமிழ்த் திரைத்துறையினரின் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b