Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 4 டிசம்பர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி காவல்துறை மற்றும் NSG அதிகாரிகளுடன் புதினின் பயணத்தின் அனைத்து வழிகளையும் அவர்கள் முழுமையாகச் சரிபார்த்து வருகின்றனர்.
NSG,டெல்லி காவல்துறை, ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர் சுற்றியிருக்க பிரதமர் மோடி புதினுடன் இருக்கும்போது சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) கமாண்டோக்களும் இந்தப் பாதுகாப்பில் பணியாற்றுவர்.
இந்தப் பயணத்தில் புதின் சாலை மார்க்கமாக பயணிக்க அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM