Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 4 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், தென்காசி நகரின் மையப் பகுதியில் உள்ள நடுபல்க் சிக்னல் அருகே பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்த அரசு வழக்கறிஞரான முத்துக்குமாரசுவாமி என்பவரை சிவசுப்பிரமணியன் என்ற நபர் வெட்டி படுகொலை செய்த நிலையில், இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, குற்றவாளியான சிவசுப்பிரமணியன் என்பவர் வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமியை வெட்டி விட்டு தனது செல்போனை அருகாமையில் உள்ள சாலையில் போட்டுவிட்டு அங்கிருந்து அவரது மனைவியுடன் தப்பி சென்ற நிலையில், போலீசார் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அருகாமையில் இருந்த சாலைப் பகுதியில் செல்போன் சிக்னல் கிடைத்த நிலையில், அங்கு போலீசார் சிவசுப்பிரமணியனை தேடிக் கொண்டிருந்த நிலையில், எதிர் திசையில் சிவசுப்பிரமணியன் அவரது மனைவியான ராஜேஸ்வரி உடன் சேர்ந்து கேரளாவிற்கு தப்பியுள்ளார்.
தொடர்ந்து, அவர்களை பின் தொடர்ந்து தென்காசி போலீசார் கேரளா சென்ற நிலையில், அங்கிருந்து அவர்கள் மதுரை செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில், மதுரையில் தற்போது சிவசுப்பிரமணியனின் மனைவியான ராஜேஸ்வரி மற்றும் அவருடன் இருந்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருந்தபோதும், குற்றவாளி சிவசுப்பிரமணியன் தப்பி சென்ற நிலையில், அவரை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தற்போது வலைவீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN