Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 5 டிசம்பர் (ஹி.ச.)
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், 'கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் தலைமை தாங்கினர்.
விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் வீ ஜெகதீசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன்,பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் எம் பி பாலசுப்ரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாளை து.அமரமூர்த்தி,
வரகூர் பா.துரை சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில்,
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை
அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர்கள் பங்கேற்று, புதிய கட்டடப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.
Hindusthan Samachar / Durai.J