Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 5 டிசம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கிருந்த பாக்கு மரத்தை தள்ளி சாய்த்தது.
அந்த மரம் புத்தூர்வயல் பகுதியில் இருந்து மகாவிஷ்ணு கோயில் செல்லும் சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. யானை தோட்டத்தில் இருந்து வெளியே வராமல் அங்கேயே வெகு நேரமாக நின்றது. பின்னர் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றது.
மின் கம்பி மீது மரம் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் மரத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலையின் குறுக்கே மின்கம்பி மீது விழுந்த பாக்குமரம் வெட்டி அகற்றப்பட்டது.
உரிய நேரத்தில் கவனித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசும், வனத்துறையும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b