சிறுத்தை போலிருந்த காட்டுப் பூனை - பயத்தில் நடுங்கிய மக்கள்
கோவை, 5 டிசம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம், சூலூர் அருகே ராவத்தூர் பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 12 ம் தேதியன்று சிறுத்தை தென்பட்டது. வனப்பகுதியில் இருந்து வெகுதொலைவில் உள்ள அப்பகுதிக்கு நொய்யல் ஆற்றின் வழியாக சிறுத்தை வந
A wildcat that looked like a leopard - people trembled in fear.


கோவை, 5 டிசம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம், சூலூர் அருகே ராவத்தூர் பிரிவு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 12 ம் தேதியன்று சிறுத்தை தென்பட்டது. வனப்பகுதியில் இருந்து வெகுதொலைவில் உள்ள அப்பகுதிக்கு நொய்யல் ஆற்றின் வழியாக சிறுத்தை வந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வைரலான நிலையில், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

பின்னர் அந்த சிறுத்தை பட்டணம், வெள்ளலூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டதாக கூறப்பட்டாலும், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பட்டணம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஒரு விலங்கு தென்பட்டது.

சிறிது நேரத்தில் ஆட்களின் சத்தம் கேட்டு, அந்த விலங்கு தப்பியோடியது. அந்த விலங்கு சிறுத்தை என வீடியோ பரவிய நிலையில், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

பின்னர் அந்த விலங்கு காட்டுப் பூனை என்பது தெரியவந்ததால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Hindusthan Samachar / V.srini Vasan