முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5 2016 ஆம் ஆண்டு அவர் கால
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5 2016 ஆம் ஆண்டு அவர் காலமானார்.

இந்த நிலையில் இன்று

(டிச 05) ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, வைகைச் செல்வன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Hindusthan Samachar / vidya.b