Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத
ஆசியக் கண்டத்தின் ஆகச்சிறந்த
அரசியல் ஆளுமையே
தமிழ்நாட்டு மக்களை
தாயாய் அரவணைத்த
தனிப்பெரும் கருணையே
அகிலம் போற்றிடும் திட்டங்கள் தந்து
அன்னையென
அனைத்து உயிர்களையும் தடுத்தாட்கொண்ட
தங்கத் தலைவியே
கடைக்கோடி தொண்டனும்
அனுதினமும் அன்னையென தொழும்
கழகத்தின் காவல் தெய்வமே
எம் இதய அஞ்சலியோடு
போற்றி புகழ் வணக்கம் செலுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ