சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது பிச்சை எடுக்க பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து விசாரிக்க கோரிய மனுவு
Beg


High


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

பிச்சை எடுக்க பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து விசாரிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

சாலைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் தாய்மார்கள், உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய் தானா என்பதை கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் வழக்கு தொடர்ந்திருந்தார்

சாலை சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எந்த உருவ ஒற்றுமையும் இல்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

டிசம்பர் 11 ம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது

Hindusthan Samachar / P YUVARAJ