Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது இங்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை எடுத்துக் கூறினேன். கவனமாக கேட்டு, தன்னுடைய அன்பான வார்த்தைகளை கூறி அனுப்பினார்.
அதிமுகவின் நிறுவனர் எம் ஜி ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா இந்த இயக்கத்தை வழி நடத்தி இருந்தார். அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம்.
நான் எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் தனி கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவே இல்லை.
செங்கோட்டையன் என்னுடன் பேசவும் இல்லை.
அடுத்த கட்ட நகர்வாக தொண்டர்களின் எண்ணங்கள் படி தான் நிகழும்.
26 தேர்தலில் உங்கள் பங்கு என்ன என்ற கேள்விக்கு அதற்கு ஏன் அவசரப்படுகிறீர்கள் இன்னும் ஆறு மாதம் உள்ளது, பொறுத்திருங்கள், நல்ல செய்தி வரும் என பதில்.
ஜனநாயக நாடு இங்கு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
அதிமுக தொண்டர்களின் இயக்கம், புரட்சித்தலைவரின் இயக்கம் பழுதுபடாது.
எங்களின் நோக்கமும் கொள்கையும் ஒன்று. பிரிந்து இருக்கக்கூடிய அதிமுக சக்திகள் ஒன்று பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அமைச்சர் அமித்ஷாவை சென்று சந்தித்தோம் என தெரிவித்தார்
Hindusthan Samachar / P YUVARAJ