Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச)
சென்னை வியாசர்பாடியில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் குளத்தை 7 ஏக்கர் குளமாக சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்துள்ளது.
வியாசர்பாடி பகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதி, வழக்கமாக ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த பகுதியில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது,
இந்நிலையில், பழைய கூட்செட் சாலையில் இரண்டு ஏக்கர் பரபில் ரயில்வே குளம் இருந்தது, அது ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று சென்னை மாநகராட்சி இந்த இடத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் புதிய குளத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்த பணிகள் தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 1.15 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்தில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடைவும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குளத்தில் 1.16 லட்சம் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் என கூறும் அதிகாரிகள் குளத்திற்கு அதிகபட்சமாக தண்ணீர் வரும்போது, அருகில் உள்ள பக்கிம்காம் கால்வாய்க்கு, தண்ணீரை கொண்டு செல்லக்கூடிய வகையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இணைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ