Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 5 டிசம்பர் (ஹி.ச.)
மதுரை,திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்று விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது நயினார் நாகேந்திரனை விடுதலை செய்ய வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான பா.ஜ.க வினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போராட்டம் காரணமாக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / V.srini Vasan