விமானிகளின் பணிப் பெண்களின் ஓய்வு நேரம் அதிகரிப்பு - கோவையில் விமான சேவைகள் பாதிப்பு
கோவை, 5 டிசம்பர் (ஹி.ச.) கோவை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, அகமதாபாத் போன்ற உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. நாள்தோறும் ச
Increase in rest time for airline cabin crew: Impact on flight services in Coimbatore.


Flight


கோவை, 5 டிசம்பர் (ஹி.ச.)

கோவை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, அகமதாபாத் போன்ற உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

நாள்தோறும் சராசரியாக முப்பது விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருந்து சில விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது,

விமானத்தில் பயணிகள் தவிர்த்து விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் ஆகியோர் கொண்ட குழு கேபின் க்ரு என்று அழைக்கப்படும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கேபின் க்ரு தொடர்பாக புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.

இதன்படி கேபின் க்ரூ விற்கு ஏற்கனவே முப்பத்தாறு பணி நேரம் ஓய்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 48 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் சில விமான சேவைகளும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

விமானிகள் பணிப்பெண்கள் தயாராக உள்ள போதும், புதிய விதிமுறையால் அவர்களால் பணி செய்ய முடியவில்லை. கோவை விமான நிலையத்தில் சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு 5 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan