Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அங்கு குழுமியிருந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட தன்னிகரில்லா இயக்கமாகிய நம் அதிமுகவை தமது வாழ்வின் உயிர் மூச்சாக கொண்டு, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும் உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும் பொதுவாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கியவர்.
மிகச்சிறந்த நிர்வாகியாகவும், மத்திய மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டகவும் திகழ்ந்தவர் நம் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத பல அரிய சாதனைகளை தனது ஆட்சிக்காலத்தில் நிகழ்த்திக்காட்டி, பல்வேறு வெற்றிகளையும் விருதுகளையும் பெற்று பெருமைமிகு மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்
அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம்.
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்தவர் நம் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இத்தகைய போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரிய இதய தெய்வம் அம்மா அவர்கள் நம் அனைவரையும் ஆற்றொணா துயரத்தில் ஆழ்த்திவிட்டு நம்மைவிட்டும் இந்த மண்ணை விட்டும் மறைந்துவிட்டார்.
நீடுதுயில் கொள்ளும் எங்கள் அம்மா அவர்களே.
உங்கள் நம்பிக்கைய வீண் போகச் செய்யமாட்டோம். கழகத்துக்கு வெற்றியை ஈட்டி உங்கள் ஆன்மாவை மகிழ்விப்போம்.
இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் கம்பீரமாக நீடித்த நிலைத்த புகழோடு வாழ்ந்துகொண்டிருக்கும் நம் அம்மா அவர்களின் 9-ம் ஆண்டு நினைவுநாளில் இப்போது நான் வாசிக்கும் உறுதிமொழியை நீங்கள் அனைவரும் திரும்ப வாசித்து ஏற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இபிஎஸ் உறுதிமொழி:
• இந்திய அரசியல் வரலாற்றில் ஈடு இணையில்லா நம் புரட்சித் தலைவி தமிழக அரசியல் வரலாற்றில் பெருமைமிக்க ஆளுமைமிக்க நம் புரட்சித் தலைவி. தமிழின துரோகிகளை வென்றெடுத்த வீர மங்கை. கருணை உள்ளம்கொண்ட தாய்குலத்தில் துயர் துடைத்திட்ட வீர மங்கை., எதிரிகளின் சூழ்ச்சிகளை வேருடன் அறுத்தெறிந்த இரும்பு மங்கை.
தமிழர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் அம்மா. நம் உணர்வில் நிறைந்திட்ட நம் அம்மா. நம் உதிரத்தில் நிறைந்திட்ட நம் அம்மா, மறைந்திட்ட இந்த நாளில் உறுதிமொழி ஏற்க வீர சபதம் ஏற்க குவிந்திட்ட போர்ப்படை வீரர்களின் கூட்டத்தை பாரீர் பாரீர்.
• கடல்போல் ஆர்ப்பரிக்கும் கொள்கை வீரர்களை, வீராங்கனைகளை பாரீர்! பாரீர்!
• தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற தமிழ்நாடு தலைநிமிர கழகம் தந்தார் நம் புரட்சித் தலைவர். கொடைவள்ளல் புரட்சித் தலைவர். .கொடைவள்ளல் தந்த கழகத்தை அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழிநடக்க உறுதியேற்கின்றோம்…. உறுதியேற்கின்றோம்.
• தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாய் மாற்றிட்டார் பசியில்லா மாநிலமாய் திகழ்ந்திட அம்மா உணவகம் தந்த அன்ன லட்சுமியாய் திகழ்ந்தார். பார்போற்ற பலர் போற்ற தியாகம் உள்ளம்கொண்டு வாழ்ந்திட்ட நம் அம்மாவின் அழியாத புகழ்சிறக்க உறுதியேற்கின்றோம்! உதியேற்கின்றோம்!
• அம்மாவின் தலைமையிலான பொற்கால ஆட்சியிலே அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலே அழகான தமிழ்நாடு வளமான தமிழ்நாடு கொள்ளையில்லை கொலையில்லை. குடும்ப ஆட்சியும் இல்லை. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அத்தகைய நல்ல ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கு ஓய்வின்றி உழைப்போம் உற்சாகமாக உழைப்போம் என்று உளமாற உறுதியேற்கின்றோம்.
• பொய்யான வாக்குறுதிகள் பல தந்து தமிழக மக்களை ஏமாற்றி குடும்ப ஆட்சி கொலோஒச்சும் நாடாளும் பொய்யாளர்களின் விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட உறுதியேற்கின்றோம்… உறுதியேற்கின்றோம்
• அம்மாவின் பொற்கால ஆட்சியிலே சிறப்பான திட்டங்கள் பல உண்டு. ஏழைகள் பசியாற அம்மா உணவகங்கள், எளியோர்கள் நலம்பெற மாமா மருந்தகங்கள், கிராமப்புற மாணவர்கள் நலம்பெற மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருக்சக்கர வாகனம் என்பதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை முடக்கிப் போட்ட தீய சக்தி ஆட்சியே அம்மாவின் புகழை மறைக்காதே. கழக ஆட்சியில் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திய விடியா திமுக ஆட்சியின் கொட்டத்தை அடக்குவோம் என்ரு உறுதியேற்கின்றோம்… உறுதியேர்கின்றோம்.
• ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்தென்றார், கல்விக் கடன் ரத்தென்றார், நகைக்கடன் ரத்து என்றார், தள்ளுபடியென்றார். மாதந்தோறும் மின் கணக்கீடு என்றார். விலைவாசி குறையும் என்றார். பெட்ரோ டீசல் விலை குறைக்கப்படும் என்றார். சிலிண்டர் மானியம் தரப்படும் என்றார். செய்தாரா… செய்தாரா… பொம்மை முதலமைச்சர் செய்தாரா செய்தாரா?
• இதை விடமாட்டோம் விடமாட்டோம். பொம்மை முதலமைச்சரே பொம்மை முதலமைச்சரே… உங்கள் பொய்முகத்தை தோலுரித்துக் காட்டாமல் ஓயமாட்டோம் ஓயமாட்டோம் என்று உறுதியேற்கின்றோம்.
• மக்கள் விரோத திமுக ஆட்சியிலே குடிநீர் கட்டணம் உயர்வு, கழிவுநீர் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டணம் 3 மடங்கு உயர்வு. வரிஉயர்வுகளை திணித்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தந்திர மாடல், ஏமாற்று மாடல் திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று உறுதியேற்கின்றோம்
• கழகம் காப்போம் கழகக்ம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம் செய்திடுவோம் என உறுதிமொழி ஏற்கிறோம்
• தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். புரட்சித் தலைவர் பெரும்புகழையும், புரட்சித் தலைவியின் நெடும் புகழையும் எந்நாளும் போற்றிடுவோம்.
• இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ரு வெற்றி முழக்கம் வெற்றி முழக்கம் என்று திக்கெட்டும் வெற்றியை படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம். அதற்காக அயராது உழைப்போம்.
• மீண்டும் கழக ஆட்சி அமைத்திட வெற்றி சங்கொலி முழங்குவோம் என்று வீர சபதம் ஏற்கின்றோம்.
• 2026-ல் கோட்டையிலே நம் வெற்றிக்கொடி பறக்கட்டும். கொள்கையிலே நம் முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்
• சுடர்முகம் காட்டுவோம். வருகிறது சட்டமன்ற பொதுத் தேர்தல். இந்திய அரசியல் வரலாற்ரில் தொடர்ந்து 3 முறை ஆட்சி தந்தவர் புரட்சித் தலைவர். இந்திய வரலாற்றில் ஆளும் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்துக்கு பெருமை தேடித் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
• எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று சூளுரைத்த நம் அன்புத்தாயின் சபதத்தை 2026 தேர்தலில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் வகுத்த பாதையில் அம்மா கொள்கை வழியில் நின்று அரும்பணியாற்றி தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சி அமைத்திடுவோம்.
• மீண்டும் கழக ஆட்சி அமைத்திடுவோம் என்று உளமாற உறுதி ஏற்கிறோம். வாழ்க பேரறிஞர் அண்ணாவின் புகழ்! வளர்க புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பெரும்புகழ்! ஓங்குக புரட்சித் தலைவி அம்மாவின் நெடும்புகழ்! வெல்க வெல்க வெல்கவே அதிமுக என்றும் வெல்க வெல்க வெல்கவே.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN