அன்பே சிவம், அறிவே பலம் - மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் நேற்று முன்தினம
அன்பே சிவம், அறிவே பலம் - மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் நேற்று 144 தடை விதிக்கப்பட்டிருந்ததால் மனுதாரர் மலையேறுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று

(டிசம்பர் 4) தள்ளுபடி செய்தது.

அதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நேற்றே தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல பாஜகவினர் முயன்றனர். ஆனால், நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல உள்ளதாக தெரிவித்து திட்டவட்டமாக அனுமதி மறுத்தது.

அதனை தொடர்ந்து நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல பாஜகவினர் முயன்றனர். ஆனால், நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல உள்ளதாக தெரிவித்து திட்டவட்டமாக அனுமதி மறுத்தது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் மக்கள் நீதி மையம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது,

மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b