Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 5 டிசம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை கருத்தில்கொண்டு மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க ஏரியின் கரைகள் இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் அக்குபிரஷர் தன்மையுடைய (Reflexology method)-ல் நடைபாதை 2.00 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் அணுகக்கூடிய வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நடைபாதையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பூங்காவிற்கு வரும் மக்களின் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண்கள், பெண்கள்
மற்றும் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச 05) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப.செல்வராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Hindusthan Samachar / vidya.b