சபரிமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக பிரசாதம் வீடுகளில் கிடைப்பதற்கு தபால்துறை ஏற்பாடு
சபரிமலை, 5 டிசம்பர் (ஹி.ச.) சபரிமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தபால் துறை வழக்கம்போல் இந்த ஆண்டும் பிரசாதம் வீடுகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி அரவணை, நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம் ஆகியவை அடங்கிய பேக் அனுப்ப
சபரிமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக பிரசாதம் வீடுகளில் கிடைப்பதற்கு தபால்துறை ஏற்பாடு


சபரிமலை, 5 டிசம்பர் (ஹி.ச.)

சபரிமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தபால் துறை வழக்கம்போல் இந்த ஆண்டும் பிரசாதம் வீடுகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி அரவணை, நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம் ஆகியவை அடங்கிய பேக் அனுப்பப்படுகிறது.

ஒரு டின் அரவணை பிரசாத கிட் பெறுவதற்கு 520 ரூபாயும், 4 டின் அரவணை அடங்கிய கிட்டிற்கு 960 ரூபாயும், 10 டின் அரவணை அடங்கிய கிட்டிற்கு 1760 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த தபால் நிலையத்திலும் இந்த பிரசாதத்திற்கு முன் பதிவு செய்யலாம்.

பணம் செலுத்திய அடுத்த சில நாட்களில் பிரசாதம் வீடு தேடி வரும் என சபரிமலை தபால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM