உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை
மாஸ்கோ,, 5 டிசம்பர் (ஹி.ச.) உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து புதின் கூறுகையில், உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடத்தி
உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை


மாஸ்கோ,, 5 டிசம்பர் (ஹி.ச.)

உக்ரைன்-ரஷியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரஷிய அதிபர் புதின் சுமார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து புதின் கூறுகையில்,

உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது.

இந்த பேச்சுவார்த்தை மிகவும் அத்தியாவசியமானது என்று குறிப்பிட்ட அவர், அதே சமயம் இது மிகவும் கடினமான பணி.என்றார்.

சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

ஏற்கனவே அலாஸ்காவில் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பல்வேறு கட்டங்களாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM