தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல்
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM