முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று (டிச 05) அனுஷ்டிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் அஞ்சலி


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச.)

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று (டிச 05) அனுஷ்டிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக மக்கள் தான் என் குடும்பம்... தமிழக மக்களின் நலனே எனது நலன் என சூளுரைத்து, மக்களின் நல்வாழ்வுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் ஆளுமை, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டிய உன்னதத் தாய், அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய நமது இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...

எதுவரினும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு, இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வலம் வந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அவரது லட்சியத்தையும், கொள்கைகளையும் மீட்டெடுத்து மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b