டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் ' எனது பூத் - தவெக பூத்' என்ற பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி நடத்த திட்டம்
சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச) வரும் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் '' எனது பூத் - தவெக பூத்'' என்ற பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பகுதி ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகிகள் அவர்களின் கட்
Vijay


சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச)

வரும் டிசம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் ' எனது பூத் - தவெக பூத்' என்ற பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பகுதி ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு இதற்கான சிறப்பு பயிற்சிகளை நடத்தி அவர்களுக்கான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் சார்பில் அனுப்பி இருக்கக்கூடிய செய்தியில்,

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலை வர் விஜய் அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழக செயலாளர்கள் தங்க ளின் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகரம், ஒன்றிய, பேரூர், பகுதிகழகச் செயலாளர்கள் கவனத் திற்கு கொண்டு சென்று எனது பூத்-த.வெ.க. பூத் என்ற அடிப்படையில் தங்களுக்கு கீழ் உள்ள நகர, ஒன்றியம், பேரூர், பகுதி, கழக செயலாளர்களை அறிவுறுத்தி வார்டு, கிளை மற்றும் பூத் நிர்வாகிகளை நேரில் அழைத்து வருகின்ற சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமைக்குள் மேற்சொன்ன வார்டு, கிளை மற்றும் பூத் நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் வார்டு, கிளை, பூத் என்றால் என்ன? எஸ்.ஐ.ஆர். என்றால் என்ன? உறுப்பினர் சேர்க்கை முகாம் எவ்வாறு நடத்த வேண்டும். கிளைக் கழகத்திற்கு உண்டான பணிகள் என்ன? நிர்வாகிகளுக்கு உண்டான பணிகள் என்ன? அனைத்து விபரங்களையும் அவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தி தெரியப் படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

இப்பயிற்சி பட்டறை நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் பேரூர் கழகத் தலைமை சார்பாக மட்டுமே நடைபெற வேண்டும்.

இப்பயிற்சி பட்டறையில் தங்கள் மாவட்டத்தில் உள்ள வார்டு, கிளை மற்றும் பூத் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று பயிற்சி பெற வேண்டும்.

Hindusthan Samachar / P YUVARAJ