Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 டிசம்பர் (ஹி.ச)
தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், பழனி போன்ற பெரிய கோவில்களின் கணக்கு தணிக்கையின் முழு விபரங்களை, 2 வாரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவில்களின் கணக்கு தணிக்கை விவரங்களை சுருக்கமாக தாக்கல் செய்த தமிழக அரசின் செயல் ஏற்புடையது அல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் வருடாந்திர வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை, ஹிந்து அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த 'இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட்' தலைவர் டி.ஆர்.ரமேஷ் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது
மேலும் இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 18 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ