Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 5 டிசம்பர் (ஹி.ச.)
கோவை மாநகரை நாள்தோறும் ஆயிரக் கணக்கான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழக அரசு விடியல் பயணம் என்று பெண்களுக்காக இலவச பயணம் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அதில் பயணிக்கும் பெண்களை பேருந்து ஓட்டுநர்கள், நடத்துமார்கள் அவதூறாக பேசி கேவலப்படுத்தும் சம்பவங்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் கோவை உக்கடத்தில் இருந்து சூலூர், சுல்தான்பேட்டைக்கு செல்லும் S 27 என்ற எண் கொண்ட அரசு நகரப் பேருந்தில் உக்கடத்தில் ஏறிய அவர் பிரகாசம் (பைக் கார்னர்) பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அந்த நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டு உள்ளனர்.
மேலும் இது குறித்து கேள்வி எழுப்பிய அந்தப் பெண் பயணியிடம் அவதூராகவும், கேவலமாகவும் நடத்துனர் என்றும் ஓட்டுநர் பேசி உள்ளார். நாங்கள் அப்படித் தான் நிறுத்துவோம், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என விரட்டி உள்ளனர். இதனை அடுத்து அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் கீழே இறங்கி அந்த பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு வந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அவர்களிடம் பேசி அந்த பேருந்தை அங்கு இருந்து அனுப்பி வைத்தார் .
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan