சென்னையில் இன்று 48 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஏராளமான விம
சென்னையில் இன்று 48 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. போதிய அளவுக்கு பைலட்டுகள், விமான பணியாளர்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானிகள் பற்றாக்குறையால் சென்னையில் இருந்து இன்று (டிச 06) இயக்கப்பட இருந்த 48 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இன்று (டிச 06) அதிகாலை 3 மணியில் கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 10 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன.

வரும் 10-ம் தேதிக்கு பிறகே இண்டிகோ விமான சேவைகள் சீரடையும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து இன்று 10 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் படிப்படியாக விமான சேவை அதிகரிக்கப்படும் என சென்னை விமான நிலையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b