Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.)
கோவை கொடிசியாவில் மூன்று நாட்கள் நடைபெறும் மோட்டார் எக்ஸ்போ எனும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த பெட்ரோல், டீசல் சி.என்.ஜி மற்றும் மின்சாரத்தால் இயக்கப்படும் அதிநவீன அம்சங்களை உள்ளடக்கிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த கண்காட்சியை காணவரும் பார்வையாளர்களுக்கு வழி காட்டுவதற்கும், போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்கும் தனியார் நிறுவன காவலாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொடிசியாவின் நுழைவாயில் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜான் என்ற தனியார் நிறுவன காவலாளி, கண்காட்சிக்கு வரும் வாகனங்களையும், வெளியில் செல்லும் வாகனங்களையும் நடன அசைவுகளை வெளிப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்.
இதனை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த கண்காட்சிக்கு வந்த பொதுமக்கள், தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Hindusthan Samachar / V.srini Vasan