அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது-நடிகர் சிலம்பரசன் அறிவிப்பு
சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.) அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார் தனியார் நகைக்கடை திறப்பு விழாவிற்காக மலேசியா சென்றுள்ள நடிகர் சிலம்பரசன் அங்கு ரசிகர்கள் முன்பு பேசி தன்னுட
சிம்பு


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச.)

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்

தனியார் நகைக்கடை திறப்பு விழாவிற்காக மலேசியா சென்றுள்ள நடிகர் சிலம்பரசன் அங்கு ரசிகர்கள் முன்பு பேசி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

வடசென்னையை மையப்படுத்தி உருவாக உள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் வருகின்ற ஒன்பதாம் தேதி தொடங்குகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ