Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 6 டிசம்பர் (ஹி.ச.)
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஜோய்ஆலுக்காஸ் நகை கடையில் டைமண்ட் நகைகளை காட்சிப்படுத்தும் வகையில் “பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி கண்காட்சி” நேற்று டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கே ஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ ஜி பக்தவத்சலம், பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் டைமண்ட் நகைகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கண்காட்சி அணிவகுப்பு நடைபெற்றது.
கண்காட்சி குறித்து ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சில்லற விற்பனை நிர்வாகி ராஜேஷ் கிருஷ்ணன் தெரிவிக்கும் போது,
கோவை மாநகரம் எங்கள் பயணத்தில் எப்போதும் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது.
கோவை மாநகரில் திறக்கப்பட்ட இந்த முதல் கடை எங்களது 25 வருட காலமாக வெற்றிகரமான ஷோரூம் ஆக திகழ்ந்து வருகிறது.
அதற்காகவே தற்போது விழாக்கால நேரங்களில் நடைபெறும் இந்த கண்காட்சியை மிகவும் விசேஷமாக வடிவமைத்திருக்கிறோம்.
வாடிக்கையாளர்கள் அழகு, தனித்துவம் மற்றும் கலைநயம் ஆகிய அனைத்தையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆபரணங்களை தலைசிறந்த வடிவமைப்புகளை இந்த கண்காட்சியில் தேர்ந்தெடுக்கலாம்.
பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் ஏற்ற டைமன்ட் நகைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும், இந்த கண்காட்சி காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
வைர நகைகளின் தலைசிறந்த கலைநயம், அழகியல் மற்றும் புதுமையை ஒருங்கிணைக்கிறது. மேலும் இதனை மறக்க முடியாத இனிய அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு அளித்திட ஜோய்ஆலுக்காஸ் விசேஷமாக இந்த கண்காட்சியை வடிவமைத்துள்ளது.
கவர்ந்திழுக்கும் மணமகளுக்கான வைர நகை செட் முதல், தினசரி அணிவதற்கான நவீன வைர நகைகள் வரை இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மற்றும் நவீன டைமண்ட் நகைகள் இங்கு காண முடியும். பாரம்பரியத்தையும், நவீன வடிவமைப்பையும் ஒன்றிணைக்கும் சிறப்பு கலெக்ஷன்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியின் ஒவ்வொரு வடிவமும் ஒரு கலைப் படைப்பு; இது கண்காட்சி காலத்திற்குள் மட்டுமே கிடைக்கும் பிரத்தியேக நகைகள் ஆகும்.பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி வைரங்களின் வசீகரத்திற்கும் அந்த வசீகரத்தின் வடிவமைப்பிற்கும் ஆபரண வல்லுனராக நாங்கள் செலுத்தும் மரியாதை மற்றும் கலை ஆர்வத்திற்கான ஓர் அடையாளம்.
அழகு, தரம் மற்றும் காலம் வென்ற கலைநயத்தை கொண்ட வைர நகைகளின் அழகிய உலகத்தை அனுபவிக்க அனைவரையும் ஜோயலுக்காஸ் அன்புடன் அழைக்கிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் கே ஏ சுமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், நீண்டகால நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan