ஐதராபாத் வந்த இரு வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐதராபாத், 6 டிசம்பர் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கி வரும் சர்வதேச விமான நிலையம் பரபரப்பான இந்திய விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்ந
ஐதராபாத்  வந்த இரு வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ஐதராபாத், 6 டிசம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இயங்கி வரும் சர்வதேச விமான நிலையம் பரபரப்பான இந்திய விமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று (டிச 06) காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. அதேபோல், குவைத்தில் இருந்து ஐதராபாத்திற்கு குவைத் ஏர்வேஸ் விமானம் இன்று காலை ஐதராபாத் வந்து கொண்டிருந்தது. இந்த 2 விமானங்களிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத் விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.30 மணியளவில் இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசர அவரசமாக ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அதேவேளை, ஐதராபாத் வந்து கொண்டிருந்த குவைத் ஏர்வேஸ் விமானம் நடு வானில் திரும்பி மீண்டும் குவைத்திற்கு திரும்பி சென்றவிட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல்

புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2 விமானங்களுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b