Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஆறு நாட்களாக சந்தித்து வரும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியாததால் புதிய இணைப்புகள் வழங்குவது நிறுத்தி வைத்தது.
நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சேவைகளில் ஏற்படுத்த தொழில்நுட்ப கோளாறு மற்றும் அது சார்ந்த பிரச்சனைகளால் புதிய செல்போன் இணைப்புகளை வழங்குவதையும் ஏற்கனவே பிஎஸ்என்எல் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சிம் சேதம் அடைதல் மற்றும் தொலைந்து போன சிம் கார்டுகளுக்கு பதிலாக அதே எண்ணிற்கு மாற்று சிம் கார்டகள் வழங்குவது போன்ற அனைத்து நடவடிக்கைகளின் நிறுத்திவைத்துள்ளது.
மேலும் அவர்களுக்கான இணைப்புகளையும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை இதேபோன்று வேறு செல்போன் நிறுவனங்களிடமிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற்றிய வாடிக்கையாளர்களின் எண்ணும் வழங்கபடமால் நிறுத்திவைத்துள்ளனர்.
புதிய இணைப்பு பெறுபவர்கள் எண்ணுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பழைய வாடிக்கையாளர்கள் சிம் கார்டு சேதம் , தொலைந்து போன சிம் கார்டுகளுக்கு பதில் அதே எனில் புதிய சிம்கார்டுகள் இணைப்பும் கடந்த 6 நாட்களாக மேற்கொள்ளவில்லை.
எனவே அந்த வாடிக்கையாளர் வங்கிக் கணக்குகள் மற்றும் கூகுள் பே உள்ளிட்ட மின்னனு பரிவர்த்தனை, கேஸ் பதிவு அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களுக்கான ஓ டி பி வருவது பெற்ற அனைத்தும் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து ஊழியர்கள் முறையான பதிலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை என்பதால் இரு தரப்பினர் இடையே தேவையற்ற வாக்கு வாதம் ஏற்படுகிறது.
ஏற்கனவே பெரும் நஷ்டத்திலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 1 வாரமாக புதிய வாடிக்கையாளர் வருகை இல்லை என்பதால் மீண்டும் இழப்பை சந்தித்து வருகின்றது.
புதிய தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னும் தன்னை மேம்படுத்த வில்லை என்பதால் இது போன்ற இன்னல்களை சந்தித்து வருவதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ