Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 6 டிசம்பர் (ஹி.ச)
பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் மீது, மைக்ரோ பிளாஸ்டிக்-கின் பாதகமான தாக்கத்தை ஆழமாக ஆய்வு செய்வது குறித்த ஒரு திட்டத்தை வகுக்கும்படியும், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
வனம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக மத்திய - மாநில சுகாதாரத் துறைகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் மீது, மைக்ரோ பிளாஸ்டிக்-கின் பாதகமான தாக்கம் குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை.
இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம்.
மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்பு ஆபத்தானது என, உலகளவில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியாகி உள்ளதால், மைக்ரோ பிளாஸ்டிக்-கின் பாதகமான தாக்கத்தை ஆழமாக ஆராயும் ஆய்வு முறைகள் குறித்த முழு விபரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ